அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'இலங்கையின் நிலைமாறு நீதியும் அதன்தோல்வியும்'எனும் தொனிப்பொருளில் ஊடக சந்திப்பு-(படங்கள்

மன்னார் மாவட்ட சமூக நல ஆர்வலர்களின் ஏற்பாட்டில் ,மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன் 'இலங்கையின் நிலைமாறு நீதியும் அதன் தோல்வியும் ' எனும் தொனிப்பொருளில் மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று (8) காலை விசேட ஊடக சந்திப்பு இடம் பெற்றது.


இதன் போது மன்னார் மாவட்ட சமூக நல ஆர்வலர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


சமூக ஆர்வலர்கள் சார்பாக மன்னார் மாவட்டத்தின் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந் தை மேற்கு,மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கி குறித்த பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் இருந்தும்,மாதர்,கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதி நிதிகள்,சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன் போது 'இலங்கையின் நிலைமாறு நீதியும் அதன் தோல்வியும்' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அங்கு முன் வைக்கப்பட்டது.

குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 'சன்னார்' குளம் சார்ந்த பகுதியை இராணுவத்தினர் சுவீகரித்துள்ளமையினால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அங்கு முன் வைத்தனர்.

மேலும் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரவுக்குற்பட்ட பேசாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு,பேசாலை பகுதியில் உள்ள பலன் தரும் பனை மரங்கள் அதிகாரிகளின் உதவியுடன் வெட்டப்படுதல்,அங்கு வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைக்கேடுகள்,பாதீக்கப்பட்ட பலர் புறக்கணிக்கப்பட்டுள்ள தோடு, அதிகாரிகள் பலரின் உறவினர்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அங்கு முன் வைக்கப்பட்டது.

மேலும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை பகுதியில் தென்பகுதி மீனவர்களை நிறந்தரமாக குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மக்களின் எதிர்ப்பினால் தற்போது நீதிமன்ற விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறித்தும் விளக்கமளிக்கப்பட்ட தோடு தொடர்ந்தும் மக்கள் படைத்தரப்பினராலும்,அரச அதிகாரிகளினாலும் பாதீக்கப்பட்டு வருவதாகவும், உரிய நீதி கிடைக்காத நிலையில் உண்மையில் பாதீக்கப்பட்ட மக்கள் துன்ப துயரங்களுடன் வாழ்ந்து வருவதாகவும்,ஆனால் அதிகாரிகளின் உதவியுடன் பாதீக்கப்படாத,பண வசதி படைத்தவர்களுக்கு அரசின் உதவித்திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றமை குறித்தும் தெழிவு படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




-மன்னார் நிருபர்-

(09-12-2016)











மன்னாரில் 'இலங்கையின் நிலைமாறு நீதியும் அதன்தோல்வியும்'எனும் தொனிப்பொருளில் ஊடக சந்திப்பு-(படங்கள் Reviewed by NEWMANNAR on December 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.