அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாக தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறி ஆரம்பம்-Photos


யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில், ஏற்கெனவே விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன இயங்கி வருகின்ற நிலையில் தற்போது தொழிநுட்ப பீடமும் இயங்க ஆரம்பித்துள்ளது. “நாடாளவிய ரீதியில் 23 மாவட்டங்களில் இருந்து 211 மாணவா்கள் இங்கு அனுமதி பெற்றுள்ளனா்” என யாழ் பல்கலைகழக துணைவேந்தா் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டாா்.

 “அடுத்த வருடம் 525 மில்லியன் ரூபாய் செலவில் 400 ஏக்கா் கட்டடம் அமைக்கும் பணிகள் அரம்பிக்கப்படவுள்ளன. அதன் பணிகள் நிறைவடைந்ததும், இரண்டாம் வருட கற்கைகளை மாணவா்கள் இங்கு தொடரக் கூடியதாக இருக்கும். 

ஆண்,பெண்ளுக்கு இரண்டு விடுதிகள் காணப்படுகின்றன. மேலும், இரண்டு விடுதிகள் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன” என்று அவர் ​மேலும் கூறினார்.
யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாக தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறி ஆரம்பம்-Photos Reviewed by NEWMANNAR on December 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.