மன்னாரில் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு-மூவர் கைது.
தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்புக்கு அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாப் பொதிகளுடன் 3 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்தே குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் தலைமன்னாரில் இருந்து மன்னார் நோக்கி வந்தது கொண்டி சொகுசு கார் ஒன்றினை இடை மறித்து சோதனை செய்தனர்.
இதன் போது காரில் மறைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 35 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகளை மீட்டுள்ளதோடு குறித்த காரில் பயணித்த கொழும்பைச் சேர்ந்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகள் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்தே குறித்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் தலைமன்னாரில் இருந்து மன்னார் நோக்கி வந்தது கொண்டி சொகுசு கார் ஒன்றினை இடை மறித்து சோதனை செய்தனர்.
இதன் போது காரில் மறைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 35 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகளை மீட்டுள்ளதோடு குறித்த காரில் பயணித்த கொழும்பைச் சேர்ந்த 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகள் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.
மன்னாரில் 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு-மூவர் கைது.
Reviewed by NEWMANNAR
on
January 23, 2017
Rating:

No comments:
Post a Comment