மன்னாரின் கல்விக்குரலின் அடுத்த கட்ட உதவிகள் வழங்கி வைப்பு
மன்னார் மாவட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கையை உயர்த்த மன்னாரின் கல்விக்குரலின் கற்றல் உதவி வழங்கும் நிகழ்வு இன்று இரண்டு இடங்களில் நடைபெற்றது. இதில் முதலாவது நிகழ்வானது மன்னார் எழுத்தூர் பாடசாலையிலும் ,இரண்டாவது நிகழ்வு அடம்பன் பாடசாலையிலும் சிறப்பாக இடம்பெற்றது . இந்த நிகழ்வு குறித்து மன்னாரின் கல்விக்குரலின் தலைவர் டிலான் கருத்து தெரிவிக்கையில்
கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக தனது சேவையை செய்து வரும் இவ் அமைப்பு .
இந்த ஆண்டு சுமார் 3௦௦௦ மாணவர்கள் நன்மையடையவுள்ள நிலையில் இம்முறை ஒரு தொகுதி மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான பெறுமதியான அனைத்து கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படுள்ளது என தெரிவித்தார். அத்துடன் மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை குறைத்துக் கொண்டு தங்களின் குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு கல்வி கற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நன்மைகள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் நுற்றுக்கணக்கான அளவு அதிகரித்து வருகிறது , எம் அமைப்போடு இணைந்து கொண்டு ஒவ்வொரு பிள்ளையின் பாதுகாவலரும் அவர்களின் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கை குறித்து அடிக்கடி எங்களுடன் கலந்துரையாடி வருகின்றனர் இப்படியான விடயங்களை வரவேற்கிறோம் என்றும் மன்னாரின் கல்விக் குரலின் தலைவர் டிலான் தெரிவித்தார்.
விளம்பரத்துக்காக செயற்படாமல் அதிகளவான மாணவர்களுக்கு தன்னால் முடிந்த பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் மேற்படி அமைப்புக்கும் உதவி பெற்றுக்கொண்ட மாணவர்களின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Reviewed by NEWMANNAR
on
January 23, 2017
Rating:
No comments:
Post a Comment