பூமிக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்: பல நாடுகளை சுனாமி தாக்கும் அபாயம்: பீதியில் மக்கள்
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகள் இடையே அமைந்துள்ள Bougaineville தீவு அருகே சுமார் 168 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து அருகில் உள்ள தீவுகளை சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா, சமோவா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, டோங்கா, நியூ கலிடோனியா மற்றும் பிற சுற்றியுள்ள தீவுகளில் 0.3 மீட்டர் என குறைவாக அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என வானியல் ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.
உலகில் ஏற்படும் சுமார் 90 சதவீத நிலநடுக்கும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் சாலமன் தீவுகளில் ஏற்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்: பல நாடுகளை சுனாமி தாக்கும் அபாயம்: பீதியில் மக்கள்
Reviewed by Author
on
January 22, 2017
Rating:

No comments:
Post a Comment