அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி இளைஞர்கள் முன்னெடுத்த ஆதரவு போராட்டம்...படங்கள் இணைப்பு

 மன்னாரில் இன்று 21-01-2017 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் தாய்தமிழ் உறவுகளுக்காக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி இளைஞர்கள் முன்னெடுத்த ஆதரவு போராட்டம்... 
கடந்த வாரம் தொடக்கம் தமிழகம் மற்றும் உலகின் அனைத்து தமிழர்கள் வாழும் இடங்களிலும் அதே போன்று இலங்கையின் பல பாகங்களிலும் தாய்தமிழ் உறவுகளுக்காக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி பெரும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் என தமிழர் பாரம்பரியத்துக்காக இனம், மதம் நாடு அனைத்தையும் தாண்டி தமிழர் என்ற ஒற்றுமையோடு குரல்கொடுக்கும் இந்த வேளையில் மன்னார் மாவட்டத்தின் நகரப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆதரவு பேரணி 21-01-2017 சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சந்தியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக தமிழரின் உறவு உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக  உணர்வுப்பூர்வமாக ஜல்லிக்கட்டுக்கு  ஆதரவான வாசகங்களை  அடங்கிய கைகளில்  சுலோக அட்டைகளை  பெனர்  ஏந்தியவாறு தமது ஆதரவினையும்  தெரிவித்ததோடு உரிமையை வென்று எடுக்க இணைந்துள்ளோம். இது போன்று எமது இளைஞர்கள் எல்லாவற்றிற்கும் துணிந்து இறங்கினால் மிகவிரைவில் எமது தடைகள் விலகும்
















மன்னாரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி இளைஞர்கள் முன்னெடுத்த ஆதரவு போராட்டம்...படங்கள் இணைப்பு Reviewed by Author on January 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.