அண்மைய செய்திகள்

recent
-

பண்டாரவன்னியன் உருவச்சிலை அமைப்பு! தமிழரின் வீரத்தை கொச்சைப்படுத்தும் செயல்!


முல்லைத்தீவு-மல்லாவி நகரில் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச் சிலையை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின்தோற்றத்தில் அமைத்திருக்கின்றார்கள்.

இது மாவீரன் பண்டாரவன்னியனின்மாவீரத்தையும், தமிழர்களின் வீரத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு செயல் எனவடமாகாணசபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 82ம் அமர்வு இன்றைய தினம் மாகாணசபை பேரவை செயலகத்தின் சபாமண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகமேற்படி விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

குறித்த விடயத்தை முன்வைத்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மல்லாவி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு கீழ்பண்டாரவன்னியன் என எழுதியால் மட்டுமே அது பண்டாரவன்னியனின் சிலை என மற்றவர்களுக்கு தெரியும்.

ஒரு மாவீரனின் சிலையை சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளில்பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அமைத்திருக்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கே வருகிறவர்கள் அந்த சிலையை பார்த்தால்தமிழர்களின் வீரத்தை குறித்து என்ன நினைப்பார்கள்? இது பண்டாரவன்னியனை கொச்சைப்படுத்தும் ஒரு செயல் என்றார்.

தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்25ம் அமர்வில் பண்டாரவன்னியனின் சிலையை முல்லைத்தீவு நகரில் அமைப்பதற்கானதீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதற்கிடையில் பண்டாரவன்னியனை கொச்சைப்படுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்.

இந்த சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லாவி பிரதேச மக்கள் எனக்குகொடுத்திருக்கும் கடிதம் ஒன்றில் ஒரு மகள் தனது தந்தையை பார்த்து பண்டாரவன்னியன்போலியோ நோயினாலா இறந்தார் எனக் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனவே இந்த சிலைஅமைப்பு தமிழ்மக்கள் பண்டாரவன்னியன் மீது கொண்டிருக்கும் கௌரவத்தையும், பண்டாரவன்னியனின் மா வீரத்தையும் கொச்சைப்படுத்தும் ஒரு செயல் எனச் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேசுகையில் அந்த சிலைக்கு கீழ் 23 ம் புலிகேசிஎன எழுதி விடுங்கள் என்றார்.
பண்டாரவன்னியன் உருவச்சிலை அமைப்பு! தமிழரின் வீரத்தை கொச்சைப்படுத்தும் செயல்! Reviewed by NEWMANNAR on January 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.