1500 மில்லியன் ரூபா பணத்தை வழங்கிய புலம் பெயர் தமிழர்கள்..! வடக்கை தனிநாடாக மாற்ற திட்டம்
புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் ஆயிரத்து 500 மில்லியன் ரூபா பணத்தை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் கடற்படை அதிகாரியுமான வீரசேகர இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளவே இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் அனைவரும் இந்த பணத்திற்கு நாட்டை காட்டிக்கொடுப்போர்.
தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள், புலம்பெயர் தமிழர்கள், மேற்குலக நாடுகளின் முழுமையான ஆதரவுடனேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக வடக்கை தனி நாடாக மாற்றிக்கொடுப்பதே இவர்களின் அபிப்பிராயமாக இருக்கின்றது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் நாட்டின் இறையாண்மை பெரிய ஆபத்திற்கு உள்ளாகும்.
எனினும் பெருபான்மை சமூகம் இந்த விடயம் தொடர்பில் உரிய முறையில் விளங்கிக்கொள்ளவில்லை எனவும் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1500 மில்லியன் ரூபா பணத்தை வழங்கிய புலம் பெயர் தமிழர்கள்..! வடக்கை தனிநாடாக மாற்ற திட்டம்
Reviewed by Author
on
February 02, 2017
Rating:

No comments:
Post a Comment