2வருட கால அவகாசத்தில் உலகமே எம்மை மறந்து விடும் ஐரோ. பிரதிநிதிகளிடம் விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு
இலங்கைக்கு இரண்டு வருட காலம் அவகாசம் கொடுக்கப்பட்டால் எமது பிரச்சினைகளை உலகம் மறந்து போகும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவ்வாறு அவகாசம் வழங்குவதாயின் குறுகிய காலமும் ஐ.நாவின் கூடிய மேற்பார்வையும் அவசியம் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தும்லை மார்க் மற்றும் ஐக்கிய நாடுகளின்; இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மக்கோலே ஆகியோருக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன்போது மேற்குறித்த விடயம் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் கொடுப்பதில் எமக்கு உடன்பாடில்லை என தெரிவித் திருந்தேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்ட போதும் இலங்கைக்கு இதுவரை காலமும் ஒரு வருடம்தான் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்ட அளவு விடயங்களை செய்துள்ளார்கள். தொடர்ந்து கால அவகாசம் கொடுப்பதால் நன்மைதான் ஏற்படும் என தெரிவித்தார்கள். இதுவரை கால அவகாசம் கொடுத்தபோது எந்த அளவில் மக் களுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தது என்பதை ஆராய்ந்து பார்த்து கால அவகாசம் கொடுப்பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் தெரிவித்திருந்தேன்.
ஏனெனில் இதுவரை ஐ.நாவின் நேரடி கண்காணிப்பு இருக்கவில்லை. இலங்கைக்கு கால நிர்ணயம் கொடுத்து அதில் முன் னேற்றத்தை காட்டவேண்டும் என ஐ.நா எதிர்பார்த்திருந்தது.
எனவே அதனால் எந்த அளவு மாற்றம், நன்மை போன்றன மக்களிடம் இருந்துள்ளது என பரிசீலித்து பார்க்க வேண்டிய கடமை ஐ.நாவுக்கு உள்ளது. அதை அவர்கள் செய்வார்கள்; என நம்புகிறோம்.
ஆனால் இரண்டு வருடங்கள் கால அவகாசம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. கொடுப்பதாயின் குறுகிய காலம் கொடுத்து கூடிய ஐ.நாவின் மேற்பார்வை இருப்பது முக்கியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
2வருட கால அவகாசத்தில் உலகமே எம்மை மறந்து விடும் ஐரோ. பிரதிநிதிகளிடம் விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு
Reviewed by Author
on
February 17, 2017
Rating:

No comments:
Post a Comment