அண்மைய செய்திகள்

recent
-

கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி! விழுந்தது அவுஸ்திரேலியா....


அவுஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில அசத்தல் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கெண்ட டி20 தொடரில் இலங்கை 1-0 என முன்நிலை பெற்றுள்ளது.

மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று இலங்கை அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்த 168 ஓட்டங்களை எடுத்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அணித்தலைவர் ஆரோன் பின்ச் அதிக பட்சமாக 43 ஓட்டங்களை எடுத்தார்.

இலங்கை தரப்பில் அணிக்கு திரும்பியுள்ள லசித் மலிங்க 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இலங்கை அணி விளையாடிது.

கடைசி பந்தில் இலங்கை அணியின் வெற்றிக்கு 1 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கை வீரர் Kapugedara பவுண்டரி அடித்து அசத்தினார்.

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 172 ஓட்டங்கள் எடுத்து. 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றிப்பெற்றது.

இலங்கை தரப்பில் Gunaratne அதிகபட்சமாக 52 ஓட்டங்களை எடுத்தார். அவுஸ்திரேலிய தரப்பில் Zampa, Turner தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கடைசி பந்தில் இலங்கை திரில் வெற்றி! விழுந்தது அவுஸ்திரேலியா.... Reviewed by Author on February 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.