கூவத்தூர் முகாமில் 40 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி?
கூவத்தூர் ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏக்களில் கிட்டத்தட்ட 40 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களை சமாதானப்படுத்த பல்வேறு வழிகளில் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக இரண்டாக உடைந்து விட்டது. ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியும், பொருளாதார குற்றவாளி சசிகலா மற்றும் ஃபெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவரான டிடிவி தினகரன் தலைமையில் இன்னொரு அணியுமாக அதிமுக பிளவுபட்டுக் கிடக்கிறது.
இந்த அணிகளில் யார் ஆட்சியைக் கைப்பற்றப் போவது என்ற மோதலில் சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி வென்று ஆட்சியமைத்துள்ளார்.
ஆனால் பெரும்பான்மை பலத்தை நாளை அவர் நிரூபிப்பாரா என்ற பெரும் குழப்பம் இன்னும் முடிவில்லாமல் நீண்டு கொண்டுள்ளது.
பெரும்பான்மை இருக்கிறதா நாளை சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது எடப்பாடி அரசு. இதற்காக நாளை முற்பகல் 11 மணிக்கு சட்டசபை கூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியால் பெரும்பான்மை பலத்த நிரூபிக்க முடியாது என்று பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.
எத்தனை பேர் ஆதரவு தனக்கு 124 பேர் ஆதரவு உள்ளதாக கூறியிருந்தார் எடப்பாடி. ஆனால் அத்தனை பேரின் பலம் உண்மையிலேயே அவருக்கு உள்ளதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. காரணம், நேற்று ராஜ்பவனுக்கு அத்தனை பேரும் வரவில்லை.
40 பேர் எதிர்ப்பாமே கிட்டத்தட்ட 40 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிர்ப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் தங்களை உடனடியாக வீடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், தங்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும் கூறி வருகிறார்களாம்.
இவர்களை சமாதானப்படுத்த பல வழிகளையும் பயன்படுத்தி வருவதாக சொல்கிறார்கள். இங்கு வந்தது முதலே இவர்களை சமாதானப்படுத்தும் வேலைகள் நடந்து வருகிறதாம். ஆனால் இவர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்து வருவதாக சொல்கிறார்கள்.
தற்போது இவர்களை தம்பித்துரையும், எடப்பாடி பழனிச்சாமியும் சந்தித்து பல்வேறு விஷயங்களை உறுதியளித்து சமாதானப்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.
ஆனால் இவர்கள் வழிக்கு வருவார்களா என்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள். சட்டசபைக்கு வரும்போதுதான் உண்மையிலேயே எடப்பாடியாருக்கு எத்தனை பேர் ஆதரவு என்பது தெளிவாகும் என்று கூறுகிறார்கள்.
கூவத்தூர் முகாமில் 40 எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி?
Reviewed by Author
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment