தமிழக முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி! நேரடி காட்சிகள்....
தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்தார்.
தமிழகத்தின் புதிய அமைச்சர்களுக்கான பட்டியலை ஆளுநரிடம் ஒப்படைத்த பிறகு, பதவி பிரமாணம் செய்துக்கொள்ள வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுநரின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி உள்பட 26 அமைச்சர்களும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறுவதால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்திய நேரப்படி சரியாக மாலை 4.36 மணிக்கு வந்த ஆளுநர் நிகழ்ச்சியை துவக்கி வைத்துள்ளார்.
பின்னர், தேசிய கீதம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்துப்பாடலின்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவியேற்பு உறுதி மொழியையும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் செய்து வைத்தார்.
முதலமைச்சர் பழனிச்சாமியை தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களும் அடுத்தடுத்தாக பதவியேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் இது 3-வது அரசு பதவியேற்பு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு: எடப்பாடி பழனிச்சாமி- ஆளுநர் சந்திப்பு
தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும் தருவாய் தற்போது உருவாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை என்ற செய்தி வந்தவுடனே கூவத்தூரில் அவர் முன்னிலையில் அதிமுகவின் எம்.எல்.ஏக்களால் சட்டசபை குழுத்தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டார்.
இதன் பின்னர் இருமுறை ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இன்றும் ஆளுநரை சந்திக்க மூன்றாவது முறையாக தற்போது ஆளுநர் மாளிக்கைக்கு சென்றுள்ளார்.
இந்த சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களை எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் ஆட்சி அமைக்க கூறிவிட்டால் இன்று மாலையே தமிழகத்தின் முதல்வராக அவர் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் வெளியானதையடுத்து கூவத்தூரில் எம்எல்ஏ-க்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவு அளிக்காது என இளங்கோவன் அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி! நேரடி காட்சிகள்....
Reviewed by Author
on
February 16, 2017
Rating:

No comments:
Post a Comment