தொலைக்காட்சி பெட்டிக்குள் கிடந்த 1.50 கோடி ரூபாய்: அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்....
கனடா நாட்டில் பழைய தொலைக்காட்சி பெட்டிக்குள் கட்டுக் கட்டாக 1.50 கோடி ரூபாய் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பெண் ஊழியர் ஒருவர் அதனை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Barrie நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் மையம் ஒன்று இயங்கி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்த மையத்திற்கு செயல்படாத பழைய தொலைக்காட்சி பெட்டி ஒன்று மறுசுழற்சிக்காக(recycling) வந்துள்ளது.
தொலைக்காட்சி பெட்டியை வாங்கிய பெண் ஊழியர் ஒருவர் அதனை திறந்து சோதனை செய்துள்ளார்.
அப்போது, தொலைக்காட்சி பெட்டியின் பின்புறத்திற்குள் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை உடனடியாக மையத்தின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பணக் கட்டுகளை எண்ணியபோது 1,00,000 டொலர்(1,50,71,000 இலங்கை ரூபாய்) இருந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், பணக் கட்டுகளுடன் சில ஆவணங்களும் இருந்துள்ளது.
இவற்றை பரிசோதனை செய்தபோது Bolsover நகரை சேர்ந்த 68 வயதான நபர் தான் இந்த பணத்திற்கு சொந்தக்காரர் எனத் தெரியவந்துள்ளது.
பின்னர், பணத்தின் உரிமையாளரை நேரடியாக சந்தித்து விசாரணை செய்தபோது உண்மைகள் வெளியாகியுள்ளன.
‘என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக இப்பணத்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொகைக்காட்சி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்தேன்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு பணம் வைத்ததை மறந்துப் போனதால் அந்த தொலைக்காட்சி பெட்டியை நண்பர் ஒருவருக்கு அளித்துவிட்டேன்.
இந்த தொலைக்காட்சி பெட்டி தான் தற்போது மறுசுழற்சிக்கு சென்றுள்ளதாக’ உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தீவிர விசாரணைக்கு பின்னர் பணம் முழுவதும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பணத்தை பத்திரமாக வங்கியில் செலுத்துமாறு பொலிசார் அறிவுரை கூறியுள்ளனர்.
மறுசுழற்சி மையத்தில் கிடைத்த பணத்தை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த பெண் ஊழியரை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
தொலைக்காட்சி பெட்டிக்குள் கிடந்த 1.50 கோடி ரூபாய்: அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்....
Reviewed by Author
on
February 16, 2017
Rating:

No comments:
Post a Comment