"உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான்" அமெரிக்க உளவுப்படைஅதிகாரி கெவின் ஹல்பெர்ட்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், அமெரிக்க உளவுப்படையின் (சி.ஐ.ஏ.) நிலைய அதிகாரியாக பணியாற்றியவர் கெவின் ஹல்பெர்ட். இவர் அமெரிக்காவில் இயங்கி வருகிற உளவுப்படையினருக்கான ‘சைபர் பிரீப்’ என்ற இணையதளத்தில் பாகிஸ்தானைப் பற்றிய பதிவை வெளியிட்டுள்ளார்.
"உலகத்துக்கே பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடாக இருக்கக்கூடும். பாகிஸ்தானின் தோல்வி, உலகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சர்வதேச நிதியமும் கோடிக்கணக்கான டாலர்கள் நிதி உதவி செய்து வருகின்றன.
அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்து, அவர்களை நல்ல நடத்தையை நோக்கி வழிநடத்த முயற்சி செய்கிறது. ஆனால், அதில் ஓரளவுதான் வெற்றி கிடைத்திருக்கிறது" என்று அதில் தெரிவித்துள்ளார்.
"உலகிலேயே ஆபத்தான நாடு பாகிஸ்தான்" அமெரிக்க உளவுப்படைஅதிகாரி கெவின் ஹல்பெர்ட்
Reviewed by Author
on
February 17, 2017
Rating:

No comments:
Post a Comment