அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபை..... டெங்கு ஒழிப்புவாரம்- மாபெரும் சிரமதானம்13.03.2017 –19.03.2017.

மன்னார் நகர சபை அறிவித்தல் டெங்கு ஒழிப்புவாரம்- மாபெரும் சிரமதானம்-13.03.2017 –19.03.2017.

அண்மைக்காலங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் நகரசபையானது 13.03.2017 –19.03.2017 வரையானகாலப்பகுதியில் மன்னார் நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் பின்வரும் காலஅட்டவணையின் அடிப்படையில் சிரமதானப் பணியினை மேற்கொள்ளவுள்ளது.

              திகதி                                                     பிரதேசங்கள்
  • 13.03.2017 (திங்கள்)    பள்ளிமுனைகிழக்கு பள்ளிமுனைமேற்கு
  • 14.03.2017 (செவ்வாய்)உப்புக்குளம் வடக்கு உப்புக்குளம் தெற்கு  மூர் வீதி
  • 15.03.2017 (புதன்)பெற்றா சின்னக்கடை-சாவற்கட்டு
  • 16.03.2017 (வியாழன்) கடலேரிவீதி பெரியகடை-பனங்கட்டுகொட்டுகிழக்குபனங்கட்டுகொட்டுமேற்கு
  • 17.03.2017 (வெள்ளி) எமில்நகர் சாந்திபுரம் சவுத்பார்
  • 18.03.2017 (சனி ) பெரியகமம்-எழுத்தூர் பட்டித்தோட்டம்
  • 19.03.2017 (ஞாயிறு) கீரி

இச்சிரமதானப்பணியில்      அனைவரும்கலந்துகொண்டு டெங்கு நோயினைப்பூரணமாக ஒழிப்பதற்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்றய தினம் குப்பைகள் அகற்றுதல் வடிகால்கள் துப்பரவுசெய்தல் பராமரிப்பில் இல்லாத காணிகளிலும் வீதியோரங்களிலுமுள்ள பற்றைகள் அகற்றுதல் போன்றநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


குறிப்பு: தற்பொழுதுதிண்மக்கழிவுகள் அகற்றும் நடவடிக்கை ஒவ்வொருபிரதேசங்களிலும் வாரத்தில் இருதினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதனால் இனிவரும் காலங்களில் வீதிகளில் குப்பைகளைபோடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுநிற்கின்றோம். மீறுவோர் மீது எதிர்வரும் காலங்களில்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைஅறியத்தருகின்றோம்.

செயலாளர்
நகரசபை
மன்னார்.
 


தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் நகர சபை..... டெங்கு ஒழிப்புவாரம்- மாபெரும் சிரமதானம்13.03.2017 –19.03.2017. Reviewed by Author on March 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.