அவுஸ்திரேலிய அமைச்சருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு...
அவுஸ்திரேலிய நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ தலைமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பு யாழ். கைத்தடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த சந்திப்பில் அவுஸ்திரேலிய நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸ உடன் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
வடமாகாண அலுவலகத்திற்கு வருகைதந்த கொன்சீற்றா பியராவன்ரி வெல்ஸவிற்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலிய அமைச்சருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு...
Reviewed by Author
on
April 05, 2017
Rating:

No comments:
Post a Comment