அமெரிக்காவில் 1-வருடம் சிக்கன் இலவசம்.. அசத்திய இளைஞன்....
அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் கார்டர் வில்கெர்சன். அங்குள்ள உணவகம் ஒன்றுக்குச் சென்ற அவர், உங்கள் கடை சிக்கனுக்கு விளம்பரம் செய்கிறேன். அதுக்கு பரிகாரமா, எனக்கு இலவசமாக சிக்கன் வேணும் என்று விளையாட்டாகக் கேட்டுள்ளார்.
கடைக்காரரும் தினமும் சிக்கன் சாப்பிட்டுக்கோ. ஆனா, உன் விளம்பர டிவிட்டர், ஒரு கோடியே 80 லட்சம் ரீ டிவிட் ஆகணும். சரியா என்று கேட்டுள்ளார்.
இதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த கார்டர். ஏதோ ஒரு டுவிட் போட்டுள்ளார். இவர் போட்ட டிவிட், அதிகமாக ரீடிவிட் ஆகி, அவர் சொன்ன, ஒரு கோடியே 80லட்சத்தைத் தாண்டி பறந்தது.
அதன் பின் கடைக்குச் சென்ற கார்டரிடம் ஓட்டல் உரிமையாளர், வேறு வழியில்லாமல், ஒரு வருடத்திற்கு இங்கே உங்களுக்கு சிக்கன் இலவசம் என்று கூறியுள்ளார்.
இந்த ஒரு வருட சிக்கனோடு, கின்னஸ் சாதனையும் செய்திருக்கிறது அந்த டிவிட். அப்படி அதில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்காவில் 1-வருடம் சிக்கன் இலவசம்.. அசத்திய இளைஞன்....
Reviewed by Author
on
May 12, 2017
Rating:

No comments:
Post a Comment