மன்னார் சிறுவர் பூங்கா அழகுபடுத்தப்படுமா……மன்னார் நகரசபைச்செயலாளரிடம் கேள்வி…..
மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்திப்பணிகள் நடைபெற்றுவருகின்றது மிகவும் சந்தோசமான விடையம் தான் ஆனால் அபிவிருத்தி செய்த பின்பு அது முறையாக பேணப்படுகின்றதா.... என்றால் இல்லை.... இல்லவே இல்லை.... காரணம் அபிவிருத்தி என்பது எப்போதும் நடைபெறுவதில்லை ஒரு முறைதான் ஆனால் அதன் பயன் பாடு அதிக நாட்கள் நீடிக்கவேண்டும். அதற்கு தகுந்த தகுதியான தரமான அபிவிருத்திப்பணியாகவும் இருக்க வேண்டும்.அதே நேரத்தில் பயன்பெறுவோர் நுகர்வோர் பாதுகாப்பாகவும் பாதுகாக்க வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டும். காரணம் எமக்காக எம்முடையதே எமது மாவட்டத்திற்கானது என்பதை உணர வேண்டும்.
இன்று மக்களிடம் இருந்து நியூமன்னார் இணையத்திற்கு ஒரு முறைப்பாடு வந்தது அதாவது மன்னார் நகரப்பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவானது ஆரம்பத்தில் நல்லநிலையில் இருந்தது.
சிறுவர்பூங்காவுக்கான அம்சங்களுடன் தரமான வையாக இருக்கவேண்டும்.
தற்போது மிகவும் மோசமான நிலையில் உடைந்தும் அறுந்து தொங்கிக்கொண்டும் துப்பரவற்றமுறையில் உள்ளது இதைகண்டுகொள்ளாமல் இருக்கும் மன்னார் நகர சபை காரணம் என்ன…..???
இக்கேள்வியை மன்னார் நகரசபைச்செயலாளார் அவர்களிடம் நியூமன்னார் இணையம் முன்வைத்தபோது….
உண்மைதான் அதற்கான காரணமே இக்கேள்வியினை கேட்பவர்கள் தான் பூங்காவினை பாவிக்கும் முறையில் பாவிக்கவேண்டும் ஒரு முறை பயன்படுத்தினால் போதும் எனநினைப்பவர்களும் ஒரு சிலரின் அடித்துடைக்கும் அடாவடித்தனமான செயல்பாட்டினாலும் தான் சிறுவர்பூங்கா இந்த நிலையில் உள்ளது. கவலையான விடையம் தான் அதற்கான திருத்தல் வேலைக்கான நிதியினை ஒதுக்கியுள்ளேன்.
06மாதம் நடுப்பகுதிக்குள் சிறுவர் பூங்காவுக்கான திருத்தல் அழகுபடுத்தல் வேலைகள் நடைபெறும் என்பதை உறுதிப்பட தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனக்கு தெரியாமல் நடைபெறும் விடையங்களை தெரியப்படுத்தினால் அதனை உடனுக்குடன் செய்து கொடுப்பதற்கும் எமது நகரசபைப்பணியாளர்கள் தயாராகவே உள்ளார்கள் முறைப்பாடுகள் வரவேற்கப்படுகின்றன. என்றார் மன்னார் நகரசபைச்செயலாளர்.
.. மக்களின் குரலாக நியூமன்னார் இணையம்…

Reviewed by Author
on
May 12, 2017
Rating:

No comments:
Post a Comment