மன்னார் கீரி சுற்றுலா கடற்கரை கல் ஆசனங்களும் மின்குமிழ்களும் உடைப்பு.....????
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 02-05-2017 அன்று செவ்வாய்க்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியில் 3.51 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டு இன்றுடன் 25நாட்கள் தான் ஆகின்றது.
அதற்குள் கல்லாசனங்களும் மின்குமிழ்களும் உடைக்கப்பட்டுள்ளதானது. மிகவும் கேவலமான செயலாகும் ஏன் எனில் மன்னாரின் ஒவ்வொருவரும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியின் பங்காளர்கள் தான் அக்கறையுள்ளவர்கள் தான் அப்படி இருக்க யார்....??? இப்படியான கேவலமான செயலில் ஈடுபடுகின்றார்கள்.
- இவர்களின் நோக்கம் தான் என்ன...???
- ஏன் இப்படி செய்கின்றார்கள்.....???
அதையும் ஒரு சிலரின் தவறான எண்ணத்தினால் பார்வையினால் இவ்வாறு நடைபெறுகின்றது.
யாராக இருந்தாலும் கொஞ்சம் சிந்தியுங்கள்.......
மன்னார் மண்ணின் வளர்ச்சிக்காக......
மன்னார் கீரி சுற்றுலா கடற்கரை கல் ஆசனங்களும் மின்குமிழ்களும் உடைப்பு.....????
Reviewed by Author
on
May 27, 2017
Rating:

No comments:
Post a Comment