முஸ்லிம்களின் புனித நோன்பு நாளை ஆரம்பம்....
முஸ்லிம்களின் புனித நோன்பு மாதம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் நிகழ்வும், ரமழான் மாத நோன்பு ஆரம்பம் குறித்து தீர்மானிப்பதற்காகவும் பிறைக்குழு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியிருந்தது.
இந்நிலையில் நாட்டின் பல இடங்களில் இன்று மாலை ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று அதிகாலை முதல் நோன்பு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்படும் என்று பிறைக்குழு தீர்மானித்திருப்பதாக பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏழ்மையில் வாடும் மக்களின் பட்டினித் துயரை அனுபவத்தின் ஊடாக உணரச் செய்து அதன் மூலம் அம்மக்களுக்கு உதவும் மனோபாவத்தை வசதி படைத்தவர்கள் மத்தியில் உருவாக்குவதே புனித நோன்பின் நோக்கம் என்று இஸ்லாமிய போதனைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
அதற்காக இன்று தொடக்கம் எதிர்வரும் ஒருமாத காலம் வரையில் இஸ்லாமிய மதத்தவர்கள் பகல் நேரங்களில் சொட்டு நீர் கூட அருந்தாத நிலையில் புனித நோன்பை அனுஷ்டிப்பதுடன் , மாத இறுதியில் தம்மிடம் சேகரிப்பில் இருக்கும் நகை, பணம், சொத்துக்கள் என்பவற்றின் பெறுமதியில் இரண்டரை வீதத்தை ஏழை மக்களுக்காக ஸகாத் எனும் தானம் செய்யும் கிரியையிலும் ஈடுபடுவர்.
முஸ்லிம்களின் புனித நோன்பு நாளை ஆரம்பம்....
Reviewed by Author
on
May 27, 2017
Rating:

No comments:
Post a Comment