தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்...
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 82 நாளாகவும் தொடர்ந்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக இன்று வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தங்களை அனைவரும் கைவிட்டுள்ளதாகவும், 82 ஆவது நாளாக பல்வேறு நெருக்கடிகளுக்குள் மத்தியில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எதிர்பார்த்து கவனயீர்ப்பை ஆரம்பித்த போதும் இந்த போராட்டத்தை எவரும் கண்டுகொள்ள வில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்...
Reviewed by Author
on
May 12, 2017
Rating:

No comments:
Post a Comment