கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை...
முல்லைத்தீவு கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாணத்தில் சாதனை படைத்துள்ளது.
கடந்த 08.06.2017 அன்று ஓமந்தை மத்தியக் கல்லூரியில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு எறிபந்தாட்டப்போட்டியில் வட மாகாணத்தின் பிரபல பாடசாலைகள் பல கலந்து கொண்டன.
இப்போட்டியில் கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளது.
இவற்றால் பாடசாலையினுடைய பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
அண்மைக்காலமாக இந்தப் பாடசாலை விளையாட்டுக்களில் சாதனைகள் படைத்து வருவதுடன் பாடசாலையினுடைய 43 வருட வரலாற்றில் முதற்தடவையாக பெருவிளையாட்டுக்களில் தேசிய விளையாட்டுக்களில் தேசிய ரீதியில் பங்குபெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.
இந்தப் பாடசாலையின் பயிற்றுவிப்பாளராக பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் திவாகரன் உள்ளார்.
கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை...
Reviewed by Author
on
June 10, 2017
Rating:

No comments:
Post a Comment