பாடசாலையில் கல்வி கற்கும் ஆண்டுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான யோசனை...
பாடசாலையில் கல்வி கற்கும் ஆண்டுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான யோசனை தேசிய கல்வி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாதாரண தரப் பரீட்சை தரம் 10லும், உயர்தரப் பரீட்சை 12ஆம் தரத்திலும் நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நான்கு வயதை பூர்த்தி செய்யும் பிள்ளைகள் ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையில் முன்பள்ளிகளுக்குச் செல்ல வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த யோசனைகள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கல்வி கற்கும் ஆண்டுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான யோசனை...
Reviewed by Author
on
July 21, 2017
Rating:

No comments:
Post a Comment