மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலைக்கு சம்பத்வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கையளிப்பு-(படம்)
சம்பத் வங்கியின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மன்-நானாட்டான் மகா வித்தியாலயத்திற்கு சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தி உதவித்திட்டங்களை மேற்கொண்ட நிலையில் நேற்று (20) வியாழக்கிழமை குறித்த உதவித்திட்டங்கள் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் ஆண் மாணவர்களுக்கான குளியலறைத் தொகுதி,தண்ணீர் தாங்கி தொகுதிகள் என்பவற்றுக்கான வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று (20) வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக கல்லூரி நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது .
இந்நிகழ்விற்கு சம்பத் வங்கியின் வடக்கு ,கிழக்கு பிரதம முகாமையாளர்
சுமி மிதிரிபால, பிராந்திய முகாமையாளர் அரவிந்தன்,மன்னார் முகாமையாளர் வதனதாசன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக கல்லூரி நிர்வாகத்திடம் கையளித்தனர்.
குறித்த நிகழ்வில் பாடசாலை அதிபர் அருட்சகோதரன் விஜயதாசன்,பங்குத்தந்தை,பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-

மன்னார் நானாட்டான் ம.வி பாடசாலைக்கு சம்பத்வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கையளிப்பு-(படம்)
Reviewed by Author
on
July 21, 2017
Rating:

No comments:
Post a Comment