தீர்வுகளுக்காக தெய்வங்களிடம் வேண்டுதல் செய்யும் நிலைமை: எதிர்க்கட்சித் தலைவர்...
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரி தெய்வங்களிடம் வேண்டுதல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு எதிரில் கடந்த 143 நாட்களாக சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் காணாமல் போனவர்களுக்காக நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
காணாமல் போன சம்பவங்கள் உட்பட வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள அரசாங்கத்திற்கு தேவையான காலத்தை வழங்க வேண்டும்.
அவ்வாறு காலத்தை வழங்காது போனால், அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள முடியாத நிலைமைக்கு தள்ளப்படும்.
இது குறித்து இனிவரும் காலங்களில் அரசாங்கத்துடன் கடுமையாக பேசித் தீர்வை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினையில் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வது சிக்கலான பணியாக இருந்தாலும், நியாயமான விசாரணை நடத்தி காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கட்டாயம் தேடி அறிய வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் சில பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பது தெரிகிறது. சில பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்ட விதம் குறித்து திருப்தியடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீர்வுகளுக்காக தெய்வங்களிடம் வேண்டுதல் செய்யும் நிலைமை: எதிர்க்கட்சித் தலைவர்...
Reviewed by Author
on
July 12, 2017
Rating:

No comments:
Post a Comment