தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 3 வருடங்களில் தீர்வு: சுவாமிநாதன்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 3 வருடங்களில் தீர்வு கிடைத்து விடுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர், காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களாக இருந்து சமுதாயத்திற்கு கடமை செய்ய வேண்டும். மாங்குளத்தில் பொருளாதார வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பொருளாதார வலயத்தினை ஆரம்பித்தால், வடக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து பொருளாதார வலயத்திற்கு வருவதற்கான ஒப்பந்தங்கள் உள்ளன.
அவற்றினை நடைமுறைப்படுத்தினால், பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியும்.
இன்னும் ஓரிரு வருடங்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரும். நீங்கள் அனைவரும் நடேஸ்வராக் கல்லூரி மாணவர்கள் என்ற வகையில், சமுதாயத்தில் நல்லவர்களை வளர்க்கமுன்வர வேண்டும்.
வடமாகாண முதலமைச்சரிடமும் பொருளாதார வலயம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 3 வருடங்களில் தீர்வு: சுவாமிநாதன்
Reviewed by Author
on
July 12, 2017
Rating:

No comments:
Post a Comment