கறிற்றாஸ்-வாழ்வதயம் தனது பணிகளை சிறப்பாக....ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை.
“கலைவழி அமைதி”---Peace Through Cultural Events
கறிற்றாஸ்-வாழ்வதயம் தனது பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகின்றது
என்பதற்கு இவ் கலை வழி அமைதி நிகழ்வு சான்றாக அமைகின்றது. என்கிறார் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு
ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை.
21-07-2017 ஆம் திகதி “கலை வழி அமைதி” எனும் கருப்பொருளில் கறிற்றாஸ்-வாழ்வுதய ஸ்தாபனத்தினால் நடாத்தப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தமது உரையில் இன்று எமது நாட்டில் யுத்தம் இல்லையென்றாலும் நாம் பல பிரச்சனைகளை தாங்கியே வாழ்ந்து வருகின்றோம்.
மக்களுக்கிடையில் பல்வேறுவிதமான கருத்து வேறுபாடுகளும்ää பிணக்குகளும் தொடர்ந்து இருந்த வண்ணமே உள்ளது. இவ்வாறான சூழலில் இப்படியான சமாதான முன்னெடுப்பு நிகழ்வுகள் எம் எல்லோரையும் ஒருமனப்பட்டவர்களாக வாழ தூண்டுகின்றது. கறிற்றாஸ்-வாழ்வுதயம் இவ்வாறான சர்வமத ஒன்றிப்பு சமாதான முயற்சிகளை அன்றுதொட்டு இன்று வரை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் கறிற்றாஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் தமது பணியாளர்களுடன் கரம் இணைந்து பல மனிதநேயப்பணிகளை மதிநுட்பமாக திட்டமிட்டு மக்கள் பணியினை ஆற்றிவரும் வேளையில் இவ் “கலை வழி அமைதி” நிகழ்வையும் சிறப்பாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்நிகழ்வு இவ் அமைப்பின் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்பதற்கு சான்றாக அமைகின்றது. எனவும் கூறியதோடு இப்பணியகத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் கூறி கறிற்றாஸ்-வாழ்வுதயம் மேலும் பல முன்னேற்றங்களையும் கண்டு வளர தனது ஆசிகளையும் கூறி உரையினை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வில்.........
அரசஅரசசார்பற்ற பிரதிநிதிகள் பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை கறிற்றாஸ்-SEDEC தேசிய இயக்குனர் அருட்பணி மகேந்திர குணதிலக்க அடிகளார்.
யாழ்ப்பாணம் மறைமாவட்ட கியூடெக் இயக்குனர்
திருகோணமலை மறைமாவட்ட எகட் இயக்குனர்
கண்டி மறைமாவட்ட செற்றிக் இயக்குனர்
அனுராதபுரம் மறைமாவட்ட செத்சவிய இயக்குனர் மற்றும்
பௌத்த மத உயர் பீடாதிபதி சங்கைக்குரிய வல் பொல சரண அவர்களும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி A.விக்ரர் சோசை அடிகளார் அவர்களும் இன்னும் மன்னார் மறைமாவட்ட பங்குத்தந்தையர்கள் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் அத்தோடு பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னை நாள் வலயக்கல்விப் பணிப்பாளர்களாகிய திரு ஜேக்கப் திரு ஆபேல்றெவல் மற்றும் கிராமிய சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கிராம பெரியார்கள் போன்றோரும்வாழ்வுதய இலக்கு கிராம பயனாளிகள் என 3000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு வருகைதந்த பிரதம அதிதி கௌரவ விருந்தினர் சிறப்பு விருந்தினர்கள் போன்றோர் மாலை அணிவித்து தமிழ் பாரம்பரிய இன்னிய அணிவகுப்பு சிங்கள பாரம்பரிய கண்டி நடனங்களோடு கறுக்காக்குளம் பிரதான வீதியிலிருந்து கருங்கண்டல் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றல் நிகழ்வின்பின் கறிற்றாஸ்-வாழ்வுதய இயக்குனர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் “எல்லோரும் சமாதான தூதுவர்களாய் வாழ்வோம்” என்ற அழைப்பையும் விடுத்து வரவேற்புரையினை நிகழ்த்தினார்.
பின்னர் சர்வமத தலைவர்கள் பல்லின சமய இளைஞர்கள் பெரியோர்கள் இணைந்து அரங்கில் வடிவமைக்கப்பட்ட சமாதான புறாவிற்கு ஒளியேற்றியதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் பல முக்கியஸ்தர்கள் உரை நிகழ்த்தினர். அந்த வகையில் இலங்கை கறிற்றாஸ்-SEDEC தேசிய இயக்குனர் அருட்பணி மகேந்திர குணதிலக்க அடிகளார் உரையாற்றும்போது கறிற்றாஸ்-வாழ்வுதயம் இவ்வாறான சமாதான முன்னெடுப்பிற்காக முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருவதாகவும் தேசிய ரீதியில் பார்க்கும்போது கறிற்றாஸ்- வாழ்வுதயம் சமாதான செயற்பாடுகளுக்கு கூடியளவு முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்க கூடியதாகவும் இதற்கு அரும்பாடுபட்டு உழைக்கும் இயக்குனர் அருட்பணி ம. ஜெயபாலன் அடிகளாருக்கும் பணியாளர்களுக்கும் தனது பாராட்டினையும் நன்றிகளையும் தமது உரையில் தெரிவித்தார்.
கலை நிகழ்வுகள் மிகவும் தரமான முறையில் முன்னாயத்தம் செய்யப்பட்ட கலை நிகழ்வுகளாக அமைந்தது. இதில் கிராமிய நடனம் இரத்தினபுரி மறைமாவட்டதிலிருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள நடனங்கள் சிறுவர் உரிமை நடனம் சக்கரநாற்காலியின் சாதனைகள் வில்லுப்பாட்டு வேப்பிலை நடனம் நாட்டுக்கூத்து நாடகம் இசையும் அசைவும் போன்ற பல பாரம்பரிய நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வு மிகவும் பயனள்ளதாக அமைந்ததாக இதற்கு வருகைதந்த பிரமுகர்கள் மக்கள் பலரும் தமது கருத்துக்களை பகிர்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
July 26, 2017
Rating:

No comments:
Post a Comment