கிழக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நாவின் அதிகாரி....
இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை இணைப்பொதுச்செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் கிழக்கு மாகாண புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
திருகோணமலையில் வைத்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் அதிகாரி, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு ஆளுனரை சந்தித்தார் ஐ.நா பிரதிநிதி
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி டேவிட் பெல்ட்மென்ட் (JEFFREY DAVID FELTMAN) இற்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகமவிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம் பெற்றது.
பிற்பகல் 2.30 மணியளவில் கிழக்கு ஆளுனர் அலுவலகத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பின் போது,
கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும் கிழக்கு ஆளுனர் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமெனவும் கூறினார்.
அத்துடன்அனைத்து சமூகங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி சகலவிதமான கசப்பு தன்மைகளும் கிழக்கு மாகாணத்தில் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக சம்பூர் திகழ்வதாக தெரிவித்ததுடன், கிழக்கு மாகாண கால எல்லை செப்டெம்பர் 27ம் திகதியுடன்முடிவடையவுள்ளதாகவும் மாகாண சபை தேர்தல் இடம் பெறும் எனவும் அவர் கூறினார்.
கிழக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நாவின் அதிகாரி....
Reviewed by Author
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment