மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுக்கூட்டம்...
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் அகமட், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன், அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது இடம்பெறும் முறைகேடுகள் அவற்றினை இல்லாமல் செய்து சிறந்த முறையில் அவற்றினை முன்னெடுப்பது தொடர்பில் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், மாவட்டத்தில் வறுமை நிலையினை உயர்வான நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் சமுர்த்தி திணைக்களம் ஊடாக மேற்கொள்ளப்படும் வாழ்வாதார நடவடிக்கைகள் ஆராயப்பட்டதுடன், இது தொடர்பிலான பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுக்கூட்டம்...
Reviewed by Author
on
July 25, 2017
Rating:

No comments:
Post a Comment