கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்....
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 23ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிரான பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மாலக தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், அனைத்து பீடங்களையும் சேர்ந்த சிங்கள மாணவர்கள் மாத்திரம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வார்ப்பாட்டத்தின் போது கல்வி உரிமை கோரி போராடிய மாணவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம், சைட்டம் பட்டக் கடையை தடை செய், சுதந்திர வைத்தியத்தின் மீது கை வைப்பதை நிறுத்து போன்ற பனர்கள் மற்றும் பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Reviewed by Author
on
July 26, 2017
Rating:

No comments:
Post a Comment