சமூக நல்லிணக்கத்திற்கு மதப்பிரிவினை வாதங்கள் ஆரோக்கியமானது அல்ல-ஆழ்ந்த வேதனை அடைகிறது மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியம்;-(படம்)
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடை பெற்று வரும் சமயங்களுக்கிடையே உள்ள பிரிவினை வாதங்களும் பிறழ்வுகளும் நெறிமுறை சார்ந்த சமூக வாழ்வியல் கட்டமைப்புக்கு ஆரோக்கியமான பகிர்வுறவாடலை ஏற்படுத்தப் போவதில்லை. இச் செயற்பாடுகள் ஆழ்ந்த மன வேதனையைத் தருகின்றது. என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
-இவ்விடையம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மனிதரில் மனித நேயக் கோட்பாடுகளை மனிதாபிமான முறையுடன் இறை பகிர வேண்டியதே சமய நல்லொழுக்க சித்தாந்தம். மாறாக சமூக பிறழ்வுகளுக்கு வழி தேடுகின்ற மார்க்கமாக மத நிந்தனைகளை முன் நிறுத்துவது மனித மான்பு கடந்த செயலாகும்.
பண்பாட்டியல் ஒழுக்க நெறிமுறைக்குட்பட்ட மனிதன் இவ் அநாகரீக செயல்களில் ஈடுபடுவது மனித குலத்திற்கு அவமானகரமான செயலாகும.;
உணர்வு சார்ந்த மத விவகாரங்களை அறம்சார்ந்த அகிம்சையோடு அனுகாமல் நீதிக்கே சவால்விடும் அழுக்காறு நிலையில் நாம் செயலாற்றுவது அற்பத்தனமான செயற்பாடாகும்.
ஆகவே கூட்டுப் பொறுப்போடு ஒத்துணர்ந்து வாழ வேண்டிய சமூகக்கட்டமைப்பில் மேட்டிமைவாத அதிகார செயற்பாட்டு கருத்தியல் போக்கின் ஊடாக அடக்கி ஆழ முற்படுவது நீண்டகால அடிப்படையில் ஆரோக்கியமான பிணைப்புருவாக்க கட்டமைப்பபில் நீண்ட விரிசலை ஏற்படுத்தும்;. என்பதை இவ்வாறான முரண்பாடுகளுக்கு மறைமுகமாக இருந்து வழிகோலுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சாதாரண அப்பாவி மக்களை ஏவி விடுவது மனித மத விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரான செயற்பாடாகும்.
எனவே மனிதர்கள் மீதுள்ள முரண்பாடுகள் இறை சிலைகளை தகர்பதன் ஊடாக வெளிப்படுத்த முனைவது மனிதர்களின் இழி நிலைச் செயலாகும் இச் செயற்பாடுகள.;
எவ்வாறான மன உணர்வு செயற்பாட்டிலும் எவருக்கும் எழக் கூடாது. அவ்வாறு செயலாற்றுபவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது.
ஆகவே வன்முறை பிரதிவாதங்களைக் கடந்து சுமூகமான இணக்கப்பாட்டிற்கு இருசாராரும் முன்வர வேண்டும். என்பதுடன் இதனை எவரும் தமது சுயநல அரசியல் சந்தர்ப்ப வாதங்களுக்காக பயன்படுத்தக் கூடிய செயல் இல்லை என்பதையும் இவ்வாறானவர்கள் புரிந்து கொள்ள வேண்டும.; என்பதை வழியுறுத்துவதுடன் இச் செயற்பாடு மிகுந்த மன வேதனையை அழிப்பதுடன் விரைவில் சுமூக நிலை அடைய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக நல்லிணக்கத்திற்கு மதப்பிரிவினை வாதங்கள் ஆரோக்கியமானது அல்ல-ஆழ்ந்த வேதனை அடைகிறது மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள் ஒன்றியம்;-(படம்)
Reviewed by NEWMANNAR
on
July 11, 2017
Rating:

No comments:
Post a Comment