போர்க்குற்றவாளிகளான படையினரை நீதியின் முன் நிறுத்தவில்லை: பென் எமர்சன்
ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் முடக்க நிலைக்குள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பென் எமர்சன், கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் பணிமனையில் இன்று மாலை ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
இதன்போது இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன.
அதன்பின்னர் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு, ஏற்கனவே நான்கு மாதங்கள் உருண்டோடி விட்டன.
ஆனால், தீர்மானத்தின் முக்கிய இலக்குகளை அடைவதில் முன்னேற்றம் என்பது மந்த கதியிலேயே உள்ளது மட்டுமன்றி அது ஏறத்தாழ முடக்கப்பட்ட நிலைக்கு வந்து விட்டதாகத் தெரிகின்றது.
இலங்கையில் நிலைமாற்றுகால நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை காலத்தில் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையுமே நிலைமாற்றுகால நீதியை நிறைவேற்றும் விடயத்தில் உண்மையான முன்னேற்றம் காண்பதற்குப் போதுமானதாகக் காணப்படவில்லை.
போர்க்குற்றங்களை இழைத்த குற்றவாளிகளான இலங்கைப் படையினரை நீதிக்கு முன்பாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் சிறியளவிலான சான்றுகளைக் கூட காணமுடியாமல் உள்ளது என தொடர்ந்தும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றவாளிகளான படையினரை நீதியின் முன் நிறுத்தவில்லை: பென் எமர்சன்
Reviewed by Author
on
July 15, 2017
Rating:

No comments:
Post a Comment