ஒரே வாரத்தில் கோடீஸ்வரியான இளம்பெண்....
அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒரே வாரத்தில் 2 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியதன் மூலம் அவருக்கு ஜாக்பாட் அடித்து கோடீஸ்வரி ஆகியுள்ளார்.
Rosa Domingue என்ற பெண் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது லாட்டரி டிக்கெட் வாங்கி தமது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், அரிசோனாவில் உள்ள ஒரு லாட்டரி கடையில் 5 டொலர் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதன் பின்னர், 2 நாட்கள் கழித்து மீண்டும் கலிபோர்னியாவின் Gas Station என்ற பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடையில் 2 வது லாட்டரி டிக்கெட் ஒன்றினை வாங்கியுள்ளார்.
முதல் தடவை அவர் வாங்கி லாட்டரி டிக்கெட்டின் மதிப்பு 555,000 டொலர் ஆகும். 2 வது முறை அவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டின் மதிப்பு 100,000 டொலர் ஆகும்.
இவரின் அதிர்ஷ்டம், இந்த இரண்டு டிக்கெட்டுகளிலும் இவருக்கு ஜாக்பாட் அடித்து மொத்த தொகையும் கையில் கிடைத்துள்ளது.
இவருக்கு மொத்தம் 655,555 டொலர் கிடைத்துள்ளது. இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சியால் எனது கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக கூறியுள்ளார்.
இந்த பணத்தால் எனக்கு பிடித்த கார் ஒன்றினை வாங்க முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
ஒரே வாரத்தில் கோடீஸ்வரியான இளம்பெண்....
Reviewed by Author
on
July 11, 2017
Rating:

No comments:
Post a Comment