கொரிய தீபகற்ப பகுதியில் உலாவும் அமெரிக்க போர்க்கப்பல்....
உலகில் உள்ள சில நாடுகளிடம் மட்டுமே நவீன விமான தாங்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்று தான் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கார்ல்வில்சன் கப்பல்.
மிகப்பெரிய விமான தாங்கி கப்பலான இது, நிமிட்ஸ் வகையைச் சேர்ந்தது.
ஜார்ஜியா மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் கார்ல்வில்சன் நினைவாக இக்கப்பலுக்கு கார்ல்வில்சன் என்று பெயர் சூட்டப்பட்டது.
சுமார் 1092 அடி நீளம், 1 லட்சம் டன் எடையைத் தாங்கும் இக்கப்பல், எரிவாயு, டீசல், மின்சாரம் ஆகியவற்றைத் தவிர்த்து அணுசக்தி மூலம் இயங்குகிறது.
ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 25 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கும் திறன் படைத்தது எனவும் மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது எனவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி சுமார் 90 போர் விமானங்களை ஒரே சமயத்தில் சுமக்கும் வல்லமை கொண்டது.
தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அவனின் உடல் இந்த கப்பலில் இருந்து தான் வீசப்பட்டதாகவும், தற்போது இந்த கப்பல் கொரிய தீபகற்ப பகுதியில் உலாவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் உலாவும் அமெரிக்க போர்க்கப்பல்....
Reviewed by Author
on
July 25, 2017
Rating:

No comments:
Post a Comment