உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் மிதாலியின் ரன் அவுட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் சூதாட்டம்?
உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் ஒரு சூதாட்டம் என்று ஹிந்தி நடிகர் கமால்ராஷித்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்திய அணிக்கு பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியின் போது இந்திய அணியின் தலைவியான மிதாலிராஜ் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.
இந்நிலையில் ஹிந்தி நடிகரான கமால் ராஷித் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், மித்தாலி ராஜ் ரன் அவுட் ஆன விதத்திலேயே தெரிகிறது. இந்த போட்டி ஒரு சூதாட்டம் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.
மேலும் கமால்ராஷித்கான் டுவிட்டர் பக்கத்தில் இது போன்ற பதிவேற்றங்களை பதிவேற்றம் செய்வது முதல் முறையல்ல, இதற்கு முன்னர் இந்திய வீரர் கோஹ்லி மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீர்ர் கங்குலி போன்றவர்களை தனது டுவிட்டர் பக்கத்தில் அவதூறாக பேசியுள்ளார்.
உலகக் கிண்ணம் இறுதிப் போட்டியில் மிதாலியின் ரன் அவுட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் சூதாட்டம்?
Reviewed by Author
on
July 26, 2017
Rating:

No comments:
Post a Comment