பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879
1879-ம் ஆண்டு இதே தேதியில் ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர்-சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஈ.வெ.இராமசாமி.
பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879
1879-ம் ஆண்டு இதே தேதியில் ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர்-சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஈ.வெ.இராமசாமி. இவரின் குடும்பத்தினர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். ஆனால், இவரோ திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையும் பேசும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார். இவருடைய தந்தை வணிகம் செய்து வந்தார். கல்வியில் நாட்டம் இல்லாததால் 12 வயதிலேயே தனது தந்தையுடன் இணைந்து வணிகத் தொழிலை மேற்கொண்டார்.
இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவெடுத்தபோது, தனது 19-வது வயதில் தான் சிறுவயதில் இருந்தே நேசித்த 13-வயது நாகம்மையாரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணமான இரு வருடங்களில் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. அதன்பிறகு இவர்களுக்கு பிள்ளை பேறு இல்லை.
சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.
மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும்தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். தமிழ்ச் சமூகத்திற்காக இவர் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்குப் பெரியார் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.
தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது.
பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879
Reviewed by Author
on
September 17, 2017
Rating:

No comments:
Post a Comment