உலகம் முழுவதும் உடல் பருமன் நோயால் 12½ கோடி பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் 12 கோடியே 40 லட்சம் பேர் உடல் பருமன் நோயினால் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உடல் பருமன் நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதிக அளவில் வருமானம் ஈட்டும் செல்வ செழிப்பு மிக்க பல ஐரோப்பிய நாடுகளில் இந்நோய் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல் பருமன் தின விழாவையொட்டி ‘லாண்செட்’ நிறுவனம் உலகம் முழுவதும் 200 நாடுகளில் இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தியது. அதில் 12 கோடியே 40 லட்சம் பேர் உடல் பருமன் நோயினால் அவதிப்படுவது தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் குழந்தைகள் மற்றும் ‘டீன்ஏஜ்’ பருவ இளைஞர் மற்றும் இளைஞிகள் ஆவர். ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை இங்கிலாந்தில் தான் அதிக அளவில் உடல் பருமன் நபர்கள் உள்ளனர். சமீப காலமாக சீனா, இந்தியா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அவர்களில் 5 முதல் 9 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகளில் 10 பேரில் ஒருவர் உடல் பருமனால் அவதிப்படுகிறார். மிக குறைந்த விலையில் கிடைக்கும் கொழுப்பு சத்து நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் உணவு வகைகளால் தான் உடல் பருமன் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 40 ஆண்டுகளில் உடல் பருமன் நோயால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் டீன்ஏஜ் பருவத்தினரின் அளவு 10 மடங்காக உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உலகில் உடல் பருமனான நபர்களின் எண்ணிக்கை சர்வசாதாரணமாகிவிடும். உடல் நலக் கோளாறுகளும் மலிந்து விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் உடல் பருமன் நோயால் 12½ கோடி பேர் பாதிப்பு
Reviewed by Author
on
October 11, 2017
Rating:

No comments:
Post a Comment