இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 20 அடி நீள திமிங்கலம்
பிரான்சுக்கு சொந்தமான ILE DE RÉ கடற்கரையில் 20மீ நீளமுள்ள திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. Fin திமிங்கல வகையைச் சேர்ந்த இந்த பெண் திமிங்கலம் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.
முதற்கட்ட ஆய்வில் இந்த திமிங்கலத்தின் எடை சாதாரண திமிங்கலத்தின் எடையின் மூன்றில் ஒரு பங்கே இருப்பதாகவும், இதன் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் 48 மணிநேரத்திற்கு முன்பாக இறந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திமிங்கலத்தின் மாதிரியை சேகரித்த ஆய்வாளர்கள் அதன் இறப்பு குறித்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
மத்திய தரைக்கடல் பகுதியில் இதுபோல ஆண்டுக்கு மூன்று திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவது குறிப்பிடத்தக்கது.
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 20 அடி நீள திமிங்கலம்
Reviewed by Author
on
October 26, 2017
Rating:

No comments:
Post a Comment