5-வது முறையாக பிபா விருதை வென்றார் ரொனால்டோ
5-வது முறையாக பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றார்.
2017-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர், வீராங் கனைக்கான பிபா விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் ஆடவர் பிரிவில் சிறந்த வீரராக ரியல் மாட்ரிட் நட்சத்திரமும், போர்ச்சுக்கல் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். லயோனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த விருதை ரொனால்டோ தட்டிச் சென்றார். பிபாவின் விருதை அவர் பெறுவது இது 5-வது முறையாகும். மேலும் தொடர்ச்சியாக 2-வது முறையாக ரொனால்டோ இந்த விருதை கைப்பற்றுகிறார்.
விருதை பெற்ற ரொனால்டோ கூறும்போது, “சிறந்த வீரராக என்னை தேர்ந்தெடுக்க வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரியல் மாட்ரிட் ஆதரவாளர்கள், சக அணி வீரர்கள், பயிற்சியாளர், எனது நாட்டு பிரதமர் ஆகியோருக்கும் நன்றி. இவர்கள் எனக்கு ஆண்டுதோறும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தொடர்ச்சியாக 2-வது முறையாக விருதை பெற்றுள்ளேன். இது எனக்கு மிகப்பெரிய தருணம்” என்றார்.
சிறந்த வீராங்கனையாக நெதர்லாந்தின் லைக் மார்டென்ஸ் தேர்வானார். சிறந்த பயிற்சியாளர் விருதை ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜிடேன் தட்டிச் சென்றார். சிறந்த கோல் விருது பிரான்சின் ஆலிவர் கிரவுடுக்கு வழங்கப்பட்டது. - ஏஎன்ஐ
5-வது முறையாக பிபா விருதை வென்றார் ரொனால்டோ
Reviewed by Author
on
October 26, 2017
Rating:

No comments:
Post a Comment