அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு இந்தியா 5,85,000 டாலர்கள் பெறுமான உதவி


உயர்கல்வி வளர்ச்சியில் இலங்கையுடன் கூட்டுறவுக்காக தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு 5,85,000 அமெரிக்க டாலர்கள் பெறுமான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்துக்கு வேளாண்மை மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்காக இந்த உதவிகளை இந்திய அரசு செய்துள்ளதாக இந்திய தூதரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. வேளாண் மற்றும் பொறியியல் துறை வளர்ச்சிக்காக 5,85,000 டாலர்கள் பெறுமான உபகரணங்கள் மற்றும் வாகனங்களை இந்தியா வழங்கியுள்ளது.

இதோடு, கல்விப் பாடத்திட்ட மேம்பாடு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, துறைசார் பரிமாற்றங்கள் ஆகிய ஆதரவுகளையும் இந்தியா வழங்குகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்றையும் 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்தியா கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு இந்தியா 5,85,000 டாலர்கள் பெறுமான உதவி Reviewed by Author on October 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.