வவுனியாவில் 13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது
வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சிறுமியின் தந்தை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஈச்சங்குளம் பகுதியில் வசித்து வந்த இந்த சிறுமியின் நடத்தைத் தொடர்பில் அவரது தாயார் சந்தேகம் கொண்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் இது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சிறுமிக்கு உடல் பலவீனமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதில் திருப்தியடையாத தாயார், வவுனியா மருத்துவ மனைக்கு கடந்த வியாழக்கிழமை சிறுமியை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தாய் கூலிவேலைக்கு செல்லும் நாட்களில் வேலை முடிந்து வீட்டில் நின்ற நேரங்களில் தந்தையால் இந்த சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுமியின் தாய் முறைப்பாடு செய்திருந்தார்
இதனடிப்படையில், 39 வயதுடைய சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த ப்பபட்டது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவு இடப்பட்டது, பாதிக்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியாவில் 13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது
Reviewed by Author
on
October 16, 2017
Rating:

No comments:
Post a Comment