மறைந்த முன்நாள் பா உ P.S.சூசைதாசன் தனது தள்ளாத வயதிலும் நியூ மன்னாருக்கு வழங்கிய கடைசிப்பேட்டி (Photos)
மன்னார் மாவட்டத்தின் முதலாவது பட்டயக்கணக்காளரும் மன்னார் தேர்தல் தொகுதி மு.பா.பாராளுமன்ற உறுப்பினரும் சட்டம் பயின்றவரும் சிறநத முகாமையாளரும் நல்ல சமூகசேவையாளரும் என பன்முக ஆளுமைகொண்ட P.S.சூசைதாசன் ஐயாவை கடந்த தினங்களுக்கு முன்பு பலமுறை நேரில் சந்தித்தேன் அவரின் முழுமையான விபரங்களை எமது நியூமன்னார் இணையம் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக.....
ஆனால் வெளியிடும் நேரம் அவர் எங்களை விட்டு பிரிந்துவிட்டார்
மறைந்த முன்னநாள் பா உ P.S.சூசைதாசன் தனது தள்ளாத வயதிலும் நியூ மன்னாருக்கு வழங்கியஅவருடைய கடைசிப்பேட்டி
முதல் முறை நான் அவரைக்கண்டதும் என்னை..... அறிமுகப்படுத்திக்கொண்டேன் புன்னகை முகத்துடன் வரவேற்றவர் என்ன விடையம் சொல்லுங்க என்றார் நான் உங்களை நேர்காணல் செய்ய வேண்டும் என்றேன் அப்படிய தம்பி ந்ல்ல விடையம் தான் ஆனால் என்னால் பெரிதாக பேச முடியாது சுகமில்லை இன்னொரு நாள் வருங்களேன் என்றார்; மீண்டும் அவரது இல்லத்தில் மாலை வேளையில் அவரை சந்தித்தேன்....
ஐயா உங்களைப்பற்றி சொல்லுங்க---
பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை எனது ஆரம்பகாலம் மிகவும் கடினமானதும் கஸ்ரமானதும் அவை சொல்லில் சொல்லிவிட முடியாது அதையெல்லாம் தாண்டினேன் எனது மனைவியின் தந்தையின் உதவியாலும் இன்னும் சிலரும் உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் முதலாவது பட்டயக்கணக்காள்ர் நீங்கள் அது பற்றி...
உண்மைதான் எனது ஆரம்பகாலம் கடினமானது என்றேன் மன்னாரில் கல்வியை முடித்தேன் எனது மாமனார் (மனைவியின் தந்தை) கொழும்பில் சென்று கற்றேன் அப்போது தான் கணக்கியல் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது நான் படித்துக்கொண்டு இருந்தது கலைப்பிரிவு தான் எனது ஆசையால் என்னிடம் இருந்த சங்கிலியை விற்றேன் அந்தப்பணம் போதாது எனது மாமனாரிடம் தெரிவிக்க அவர் உடனே அலுவல் பார்த்து லண்டன் அனுப்பிவிட்டார்.
ஒரு மாத கப்பல் பயணம் லண்டன் அடைந்த்தும் இலகுவாக படித்துவிட முடியவில்லை சாப்பாடு தங்குமிடம் படிப்புச்செலவு என்னை பாடாய்படுத்தியது படிக்கும் நேரம் தவிர்த்து கணக்காளராய் பல பகுதி நேரவேலைகள் பார்த்து சொல்லாவமுடியும்....கண்கலங்குகின்றார் எனது முதலாவது ஆசையினை நிறைவேற்றிக்கொண்டேன் சிரிக்கின்றார்.... நல்ல உள்ளங்களின் உதவியும் இறைவனின் அருளும் என்க்கு கிடைத்தது.
அரசியலில் நீங்கள் சாதித்தது என்ன....
பெரிதாக சாதிக்கவில்லை ஆனால் எனது மக்களின் நலனுக்காய் உழைத்தேன்
எனது காலத்தில் தான் குளங்கள் புனரமைப்பு மின்சார கிளை வசதி வீதிகள் புனரமைப்பு போன்ற பல பாடசாலை விடையங்கள் செய்தேன் ஞாபகம் இப்போது இல்லை...
பெரிதாக சாதிக்கவில்லை ஆனால் எனது மக்களின் நலனுக்காய் உழைத்தேன்
எனது காலத்தில் தான் குளங்கள் புனரமைப்பு மின்சார கிளை வசதி வீதிகள் புனரமைப்பு போன்ற பல பாடசாலை விடையங்கள் செய்தேன் ஞாபகம் இப்போது இல்லை...
தற்போதைய அரசியலும் அன்றைய அரசியலும் நிலை பற்றி........
அன்றைய அரசியல் நல்லது சுயநலமில்லாதது தற்போதைய அரசியல் சுயநலமிக்கது மிகவும் சிரமமானது.
அன்றைய அரசியல் நல்லது சுயநலமில்லாதது தற்போதைய அரசியல் சுயநலமிக்கது மிகவும் சிரமமானது.
அன்று தமிழ் அரசியல் வாதிகள் தமக்குள் ஒற்றுமையாகவும் தமிழ்பற்றுணர்வுடனும் செயற்பட்டார்கள் இன்று அரசியல் வாதிகள் தமக்குள்ளே ஒற்றுமை இல்லாதவர்களாய் முரண்பட்டுக்கொண்டும் ஒரு முடிவில்லாமல் இருக்கின்றார்கள் இவர்கள் முதலில் தமக்குள்ள பிரச்சினைகளை களைந்துவிட்டு தமிழ்மக்களின் அபிலாசைகள் உரிமைகளுக்காய் குரல் கொடுத்து உறுதுணையாக இருக்கவேண்டும்.
உங்களுடன் அரசியல்வாதிகள் எப்படி ---
என்னுடன் அன்றும் சரி இன்றும் சரி நல்லவிதமாய்தான் இருக்கின்றார்கள் வீடுதேடிவந்து கதைப்பார்கள் நலம் விசாரிப்பார்கள் எல்லோருடனும் இணைந்துதான் ஒரு செயலை செய்ய வேண்டும் அப்போதுதான் அந்த செயல் வெற்றிகரமாக முடியும் இன்றைய சூழல் மிகவும் கடினமாகவுள்ளது மக்களும் தமிழ் தலைமைகளும் ஒன்றிணையவேண்டியது கட்டாயம்.
பிலேசியன் சூசை சூசைதாசன்
PILESIYAN SOSAI SOOSAITHASAN,BA(LONDAN) F.A.C.(ENG+WALES)
PILESIYAN SOSAI SOOSAITHASAN,BA(LONDAN) F.A.C.(ENG+WALES)
பிறப்பு: 24 ஜூலை 1934
இறப்பு- 13-10-2017
சூசைதாசன் தமிழர் விடுதலைக கூட்டணியின் வேட்பாளராக மன்னார் தொகுதியின் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு,15,141 வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் சூசைதாசன் மன்னார்த் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்
சூசைதாசன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் 2010 தேர்தலில் போட்டியிட்டார். ஆனாலும் இவர் கூட்டமைப்புப் பட்டியலில் ஆறாவதாக வந்ததனால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.
தொழில்முறையில் பட்டயக் கணக்காளரான அவர், ஸாம்பியா நாட்டு அரசின் நிதிக் கட்டுப்பாட்டாளர் என்னும் பெருஞ்செல்வம் ஈட்டக்கூடிய உயர் பதவியை சகல வசதி வாய்ப்புக்களுடன் வகித்திருந்தபோதும் தான் சார்ந்த தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோளுடன் அப்பதவியை விட்டு விலகி 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி யின் சார்பாகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற் குத் தெரிவாகியிருந்தார். நிதித்துறை சார்ந்த விவாதங் களின் போது அவர் நாடாளு மன்றத்தில் ஆற்றிய உரைகள் காத்திரமானவையாக அமைந்திருந்தன. நாடாளுமன்றத்துக்கு முதன்முறை யாகத் தெரிவு செய்யப்பட்ட ஓர் உறுப்பினராக இருந்தபோதும், அவரது தகைமைகளை அங்கீகரிக்கும் வகையில் நாடாளுமன்ற கணக்குக் குழுவின் தவிசாளராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பெற்ற பட்டங்களும் செய்த சேவைகளும் பற்றி.....
- 1961-08-17 PASSTED Intermedieate Examination Laws
- Sri lanka State Tradeing (Textiles)Corportion Accountes from 1968-September-1973
- Londan England this University is a Member of the Association Of commonwealth University
- 1959 Degree Batchelor Of Arts General Third Divisan University Of Toronto
- 4years Batchelor Of Arts Degree From a reputable Canadiyan University
- 1965-Chartered Accountans in England And Wales Of The University Of Londan
- He has Been a financial Contoroller of a Large Undertaking in Zambia And has 20 Years Of Expericence in finance.
- Basic Income Tax Preparation-30-01-1990
- British Insitute Of Management the Certificate Of Membership
- Budjet Performances Varlance analysing Exaaming Chief Accounting Office Board Of Management.
- P.S.Soosaithasan Select Committee to examine the Suitablity Of Candidates for High Posts
- Committe On Public Accounts Chairman(Standing Order no-125)
- Committee on Public Enterprises Deputy Chairman(Standing Order-126)
- Senior Tamil Centre Of Ontario-2003 Volunteer Award
- Vanni Tamil Community And Cultureal Center Canada Certificate
- Rotor Car 14 Sri 7242 insurance 1983-1900-Union Assurane Limited
நியூமன்னார் இணையம் பற்றி----
நல்ல விடையம் இப்போது மக்களின் அடிநாதமாக இருப்பது ஊடகம் தான் அந்த ஊடகம் மக்களை நல்வழிப்படுத்தவும் வேண்டும் நல்ல தரமான உண்மையான செய்திகளை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் அப்படியான பணியினை செய்துவரும் நியூமன்னார் இணையத்தின் சேவை பாராட்டுக்குரியது குறிப்பாக 4தடவைக்கு மேல் நீங்கள் என்னை சந்தித்துள்ளீர்கள் எனது இயலாமையும் கருதி திரும்பவந்து செவ்வி கண்டுள்ளீர்கள் உங்களின் சேவைக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி....
அருகில் இருந்து பேசிய உயிர் உள்ள வார்த்தைகள் இன்று வார்த்தைகள் நினைவாக நீங்களோ..... நிழலாக என்றும் ஆத்மா சாந்தியடைய நியூ மன்னார் பிராத்திக்கின்றது
நியூ மன்னார் இணையத்துக்காக சந்திப்பு- வை- கஜேந்திரன்-
மறைந்த முன்நாள் பா உ P.S.சூசைதாசன் தனது தள்ளாத வயதிலும் நியூ மன்னாருக்கு வழங்கிய கடைசிப்பேட்டி (Photos)
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment