முதல் முறையாக மோசமான சாதனையை செய்த விராட் கோஹ்லி
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் இடையில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.</p><p>இந்த போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி அவுஸ்திரேலிய வீரர் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இதுவரை 47 இன்னிங்சை 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி ஒருமுறை கூட டக் அவுட் ஆனதில்லை. நேற்று தனது 48-வது இன்னிங்சில் முதல்முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். ஆனாலும் 47 இன்னிங்ஸ் வரை உலகில் எந்தவொரு வீரரும் டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகாமல் இருந்ததில்லை. இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் 40 போட்டிகள் வரை மட்டுமே டக் அவுட் ஆகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக மோசமான சாதனையை செய்த விராட் கோஹ்லி
Reviewed by Author
on
October 12, 2017
Rating:

No comments:
Post a Comment