கால்பந்து உலகக்கோப்பை விளையாடும் தகுதியை இழந்த அமெரிக்கா.....
கால்பந்து உலககோப்பை தகுதி சுற்று போட்டியில், 1986 ஆம் ஆண்டில் இருந்து முதல்முறையாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அமெரிக்கா இழந்துள்ளது.
பனாமாவில் நடந்த ஒரு தகுதிச் சுற்றுப் போட்டியில் கோஸ்டா ரிகா-பனாமா அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில், ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் தகுதியை முதல் முறையாகப் பெற்றது பனாமா.
அத்துடன் அது தமது பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்து, அமெரிக்காவை ஐந்தாவது இடத்துக்குத் தள்ளியது. டிரினிடாட்டில் நடந்த போட்டியில் அமெரிக்க அணி, தமது பிரிவில் மூன்றாவது இடத்திலிருந்தது. ஆனால் பனமா அணி வெற்றி பெற்று உலககோப்பை தகுதிக்கு முன்னேறியதன் முலம், 3 வது இடத்திலிருந்த அமெரிக்கா பின்தள்ளப்பட்டு உலககோப்பை வாய்ப்பை இழந்துள்ளது.
உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில், வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபிய தீவுகளுக்கான அணி பிரிவில் முன்னிலை வகிக்கும் மெக்ஸிக்கோ அணியை ஏற்கனவே ஹோண்டுராஸ் அணி வீழ்த்தி நான்காவது இடத்தை பிடித்ததால், பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பனாமா அணியை 4-0 என்ற கோல் புள்ளிகளில் அமெரிக்கா வீழ்த்திய போதும், ஒன்பது போட்டிகளில் விளையாடி அது வெறும் மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக்கோப்பை விளையாடும் தகுதியை இழந்த அமெரிக்கா.....
Reviewed by Author
on
October 13, 2017
Rating:

No comments:
Post a Comment