6 விரல்களுடன் பிறந்த ஒரே குடும்பத்தின் 14 பேர்: வியக்க வைக்கும் தகவல்,,,,
பிரேசிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும் 6 விரல்களுடனும் ஆறு கால்விரல்களுடனும் பிறந்துள்ளது அப்பகுதி மக்களிடையே வியப்பை அளித்துள்ளது.
வியக்க வைக்கும் குறித்த குடும்பத்தில் புதிதாய் பிறந்த குழந்தையும் இதே போன்று ஆறு கால்விரல்களுடன் பிறந்துள்ளது தங்களுக்கு பெருமையே என பிரேசிலின் பிரேசிலியா பகுதியில் குடியிருக்கும் டி சில்வா குடும்பம் தெரிவித்துள்ளது.
டி சில்வா குடும்ப உறுப்பினர் அலெஸாண்ட்ரோவின் மனைவிக்கு 5 விரல்கள்தான் ஆனால் அவர்களுக்கு சமீபத்தில் பிறந்த குழந்தை 6 விரல்களுடன் பிறந்துள்ளது.
மட்டுமின்றி டி சில்வா குடும்பத்தில் 6 விரல்களுடன் பிறந்த அனைவரும் ஆரோக்கியமுடனும், சாதாரணமாக அந்த ஆறாவது விரலையும் பயன்படுத்தும் வகையும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மரபியல் பிரச்னை காரணமாகவே இந்த குடும்ப உறுப்பினர்கள் 6 விரல்களுடன் பிறக்கின்றனர் என்ற போதிலும், இது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்க்கும் என்பது வியப்பான விடயம். டி சில்வா குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் செல்லமாக 'The Family of Six’ என்றே அழைத்து வருகின்றனர்.

6 விரல்களுடன் பிறந்த ஒரே குடும்பத்தின் 14 பேர்: வியக்க வைக்கும் தகவல்,,,,
Reviewed by Author
on
October 13, 2017
Rating:

No comments:
Post a Comment