தமிழ் அரசியல் கைதிகளின் விசாரனைகள் , திட்டமிட்ட வகையில் அவர்களின் விடுதலை தாமதப்படுத்தப்படுகின்றது-
தமிழ் அரசியல் கைதிகளின் அகிம்சைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றதே தவிர தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக மன்னாரில் வைத்து இன்று புதன் கிழமை(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,,,
அனுராதபுரம் சிறைச்சாலையில் எமது தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அங்கு சிலரது உடல் நிலை கடுமையாக பாதீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர் ஆகாரம் கூட உண்ணாத நிலையில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையினால் அவர்களுடைய சிறு நீரகங்கள் கூட பாதீப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை நியாயத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை சிறைச்சாலையிலேயே மேற்கொண்டு வந்தார்கள்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டங்கள் போன்று கடந்த காலங்களில் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு காரணங்களினால் அல்லது பல அரசியல் கட்சிகளினுடைய வாக்குறுதிகளினால் அல்லது பல்வேறு தலைவர்களுடைய வாக்குறுதிகளினால் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் அடிக்கடி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறான அகிம்சைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தவிர தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை அரசினாலும் எடுக்கப்படவில்லை ஏனைய அரசியல் வாதிகளினால் கூட மேற்கொள்ளப்படவில்லை என்ற குறை இருக்கின்றது.
எங்களுடைய இயலாமையினை நினைத்து நாங்கள் குற்ற உணர்வுடன் இருப்பதா? அல்லது இதற்கான சரியான வழி வகைகளை அரசாங்கத்தை செய்ய வைப்பதில் எங்களுடைய பங்களிப்பு குறைவானதாக உள்ளதா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
ஆகவே இவர்களுடைய விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
இவர்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.அவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
-அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரனைகள் வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிராகவும்,அவர்களுடைய விடுதலைக்காக பொது மன்னிப்பை வழங்கி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளது.
-நாட்டில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ள போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விசாரனைகள் நீதி அற்ற நிலையிலே பிற்போடப்பட்டு திட்டமிட்ட வகையிலே இவர்களுடைய விடுதலை தாமதப்படுத்தப்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
இவ் விடையத்தில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக மன்னாரில் வைத்து இன்று புதன் கிழமை(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,,,
அனுராதபுரம் சிறைச்சாலையில் எமது தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அங்கு சிலரது உடல் நிலை கடுமையாக பாதீக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர் ஆகாரம் கூட உண்ணாத நிலையில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையினால் அவர்களுடைய சிறு நீரகங்கள் கூட பாதீப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்திய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை நியாயத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை சிறைச்சாலையிலேயே மேற்கொண்டு வந்தார்கள்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டங்கள் போன்று கடந்த காலங்களில் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் பல்வேறு காரணங்களினால் அல்லது பல அரசியல் கட்சிகளினுடைய வாக்குறுதிகளினால் அல்லது பல்வேறு தலைவர்களுடைய வாக்குறுதிகளினால் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டம் அடிக்கடி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறான அகிம்சைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தவிர தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை அரசினாலும் எடுக்கப்படவில்லை ஏனைய அரசியல் வாதிகளினால் கூட மேற்கொள்ளப்படவில்லை என்ற குறை இருக்கின்றது.
எங்களுடைய இயலாமையினை நினைத்து நாங்கள் குற்ற உணர்வுடன் இருப்பதா? அல்லது இதற்கான சரியான வழி வகைகளை அரசாங்கத்தை செய்ய வைப்பதில் எங்களுடைய பங்களிப்பு குறைவானதாக உள்ளதா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
ஆகவே இவர்களுடைய விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
இவர்களுடைய உயிர் பாதுகாக்கப்பட வேண்டும்.அவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
-நாட்டில் யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளை கடந்துள்ள போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விசாரனைகள் நீதி அற்ற நிலையிலே பிற்போடப்பட்டு திட்டமிட்ட வகையிலே இவர்களுடைய விடுதலை தாமதப்படுத்தப்படுவதாகவே நாங்கள் கருதுகின்றோம்.
இவ் விடையத்தில் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு,தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.என அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விசாரனைகள் , திட்டமிட்ட வகையில் அவர்களின் விடுதலை தாமதப்படுத்தப்படுகின்றது-
Reviewed by NEWMANNAR
on
October 11, 2017
Rating:
No comments:
Post a Comment