நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இயந்திரம்!
நுவரெலியாவில் புதிய வகை சோளக்காட்டு பொம்மை தயாரிக்கப்பட்டுள்ளது. காட்டு மிருகங்களிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் நோக்கில் மின்சார சோளக்காட்டு பொம்மை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவைல நுவரெலியா விவசாய சேவை அபிவிருத்தி அதிகாரி தெரிவித்துள்ளார்.
சீ டெக் சோளக்காட்டு பொம்மை என அடையாளப்படுத்தும் இந்த உபகரணத்தினால் ஒரு ஏக்கர் அளவு பயிர்ச்செய்கைகள் மிருகங்களிடம் இருந்து பாதுகாக்கப்படும். சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தில் இந்த சோளக்காட்டு பொம்மை இயங்குகிறது. பன்றி, முயல், மாடு, மான் போன்ற மிருகங்களிடம் இருந்து பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பினை இந்த இயந்திரத்தின் ஊடாக தடுதக்க முடியும்.
இந்த இயந்திரம் தற்போது வலப்பனை பிரதேசத்தில் விவசாயிகள் பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இயந்திரம்!
Reviewed by Author
on
October 11, 2017
Rating:

No comments:
Post a Comment