ஆக்ஸ்போர்ட் அகராதியில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்! ‘அப்பா’ இனி ஆங்கில வார்த்தை?
உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது.
அந்த வகையில் ‘அப்பா, அண்ணா, அச்சச்சோ’ ஆகிய வார்த்தைகள் ஆங்கில வார்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொரு வருடமும் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறான வார்த்தைகளை சேர்க்கும் நடவடிக்கையை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுக்கும். இதன்படி செப்டம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் இந்திய மொழிகளில் இருந்து 70 வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் ‘அண்ணா’ என்று மூத்தவர்களை அழைப்பார்கள். அப்பா என்ற வார்த்தை உருது மொழியிலும் தந்தையை குறிக்கின்றது.ஆச்சரியமான தகவல் அல்லது சந்தேகப்படும் படியான தகவலைக் கேள்விப்படும் போது ‘அச்சச்சோ’ என்பார்கள். இவை அனைத்தும் ஆங்கிலச் சொல்லாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெற்றுள்ளன.
ஆக்ஸ்போர்ட் அகராதியில் தமிழுக்கு கிடைத்த அங்கீகாரம்! ‘அப்பா’ இனி ஆங்கில வார்த்தை?
Reviewed by Author
on
October 26, 2017
Rating:

No comments:
Post a Comment