கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கேட்டறிந்தார் பிரதமர்
பிரதமர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத போதிலும், அக்கட்சியின் நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொலைபேசி ஊடாக கேட்டறிந்த பின்னரே தேர்தல் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. பங்கேற்கவிருந்தார். எனினும், அவசர வேலையின் நிமித்தம் இறுதி நேரத்தில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது.
இதனால் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை சுமந்திரன் எம்.பிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பை ஏற்படுத்தினார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஜனவரியில் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆட்சேபனை ஏதும் இருக்கின்றதா என பிரதமர் கேட்டுள்ளார். அவ்வாறு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்றும், தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகவுள்ளது என்றும் இதற்கு சுமந்திரன் எம்.பி. பதிலளித்துள்ளார்.
இதையடுத்து கூட்டமைப்பின் நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.
கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கேட்டறிந்தார் பிரதமர்
Reviewed by Author
on
October 26, 2017
Rating:

No comments:
Post a Comment