மன்னாரில் புதிய பங்குப் பணிமனை வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
மன்னார் மறைமாவட்டம், கட்டைக்காட்டு பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய பங்குப்பணிமனை இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் ஜேசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களினால் வைபவ ரீதியாக புதிய பங்குப்பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், மற்றும் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் புதிய பங்குப் பணிமனை வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
Reviewed by Author
on
October 26, 2017
Rating:

No comments:
Post a Comment